கார்த்திகை முருகனுக்கு உகந்தது. கார்த்திகை விரதம் கார்த்திகை நக்ஷத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படுவது.
முருகனுக்கு பலபெயருண்டு. கந்தன், கார்த்திகேயன், ஆறுமுகன், சுவாமிநாதன் என்பவை அவற்றுள் சில. இவற்றின் பெயர் காரணம் அறிவோமா?
கந்தமாதா என்பது பார்வதியின் பெயர். இந்த பெயரில் அன்னையை நவராத்திரியில் ஒரு நாள் வழிபடுகிறார்கள். எனவே அன்னையின் மகன் கந்தன் எனப் பெயர் பெற்றார்.
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகன் ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். எனவே அவருக்கு கார்த்திகேயன் எனப் பெயர்.
முருகன் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்டிரிடம் வளர்ந்த பின் அவரை அன்னை பார்வதி ஆறு முகம் கொண்ட குழந்தையாக மாற்றினார். இதனால் முருகன் ஆறுமுகன் எனப் பெயர் பெற்றார்.
ஓம் என்னும் பிரணவத்தின் அர்த்தம் அறிய வேண்டி பிரம்மாவிடம் வேண்டினார் முருகன்.அவரின் விடை முருகனுக்கு முழுமை தரவில்லை. அவர் இந்த வினாவை தனது தகப்பனிடம் கேட்க அவரின் பதிலும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.
தனது தகப்பனுக்கு பிரணவத்தின் அர்த்தத்தை விளக்க எண்ணிய முருகன் தான் தகப்பன் சாமியாக ஆனார். குரு ஸ்தானத்தில் இருந்து சுவாமிமலையில் தகப்பனுக்கு பிரணவத்தின் விளக்கம் கொடுத்தார். அவர் ‘சுவாமி’யாக மாறி தனது ‘நாதன்’ சிவனுக்கு உபதேசம் செய்ததை கண்டு மகிழ்ந்த பார்வதி அவரை சுவாமிநாதன் என அழைத்தார்.
நாங்கள் எல்லாவிதமான ஹோம சேவைகளையும் வழங்குகிறோம். நீங்கள் இணைய தளம் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். எங்கள் புரோஹிதர் சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள எங்களை அணுகுங்கள்.
Leave a Reply