ராம நாமம் - தாரக மந்திரம்.

 

ராம நாமம் - தாரக மந்திரம். 

 

மந்திரம் என்றால் சக்தி எனப் பொருள்.  தாரக என்றால் நம்மை கரை சேர்க்க கூடியது எனப் பொருள்.  நம்மை பாபமாகிய சாகரத்திலிருந்து கரை சேர்க்கக்கூடிய தாரக மந்திரமே ராம நாமம்.

 

சிவனும், நரயனணனும் நமது முக்கியமான தெய்வங்கள். நாராயண மூல மந்திரம்  “ ஒம் நமோ நாராயணா” சிவனின் மூல மந்திரம் "ஒம் நமசிவாய"

 

நாராயண மூல மந்திரம் (ஒம் நமோ நாராயணா)- ல்“ ரா” என்ற எழுத்து உயிராகும். இந்த எழுத்து “ ரா” இல்லையென்றால், அந்த மந்திரம் அர்த்தமற்று போகிறது.

 

சிவனின் மூல மந்திரம் (ஒம் நமசிவாய) - ல், '' உயிராகும். இந்த எழுத்து “ம” இல்லையென்றால், அந்த மந்திரம் அர்த்தமற்று போகிறது.

 

இந்த இரண்டு மூல மந்திரங்களின் உயிர்  “ரா மற்றும் “ம” இந்த இரண்டு எழுத்துக்களில் தான் அடங்கியுள்ளது. இவையிணைய 'ராம' வாகும்

 

    ஸ்ரீராம நவமி

 

                                                                       

தியாகராஜ சுவாமிகளும் தனது பாடல் “எவரனி நிர்ணயிஞ்சிரி” – ல் இதை குறிப்பிடுகிறார்

 

ஸி1வ மந்த்ரமுனகு 3ம ஜீவமு 
மாத4வ மந்த்ரமுனகு ரா ஜீவமுயீ

விவரமு தெலிஸின க4னுலகு ம்ரொக்கெத3
விதரண கு3ண 4
த்யாக3ராஜ வினுத

 

" சிவ மந்திரத்திற்கு, 'ம' உயிராகும்; மாதவ மந்திரத்திற்கு, 'ரா' உயிராகும்; இந்த விவரத்தினையறிந்த சான்றோரை வணங்குகின்றேன்"

 

அதனால் தான் ராம மந்திரத்தை தாரக மந்திரம் என்று குறிப்பிடுகிறோம்.

 

ராமரின் பெருமைகளை நினைந்து, ராம நாம மகிமைதனை உணர்ந்து, ஜபித்து நமது பாபங்களிலிருந்து  விடுதலை பெறுவோம்.  

 

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    10 + 6 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.