தை மாதத்தில் வரும் வளர் பிறை பஞ்சமி திதி அன்று வசந்த் பஞ்சமி கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் வசந்த் பஞ்சமி ஜனவரி மாதம் 20ம் தேதி வருகிறது.
‘வசந்த்’ என்றால் வசந்த ருதுவைக் குறிக்கும். பஞ்சமி என்பது வளர்பிறையின் ஐந்தாம் தினமாகும். வடஇந்தியாவில் இதை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்
இந்த நாளில் மக்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து, மஞ்சள் நிற மலர்களை இறைவனுக்குப் படைத்து, வசந்தத்தின் துவக்கத்தை கொண்டாடுகிறார்கள்.
வானில் பட்டம் செலுத்தி மகிழ்கிறார்கள்.
வசந்த் பஞ்சமி அன்னை சரஸ்வதியின் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்னை சரஸ்வதியை கொண்டாடும் வகையில் அமைந்ததால், இந்த நாளில் சிறுவர்கள் தங்கள் படிப்பைத் துவங்கும் வழக்கமுண்டு. சரஸ்வதி கல்விக்கும், ஞானத்திற்கும் உண்டான கடவுள் என்பது நாம் அறிந்ததே.
வசந்த ருதுவின் ஆரம்பத்தை கொண்டாடும் வகையிலும் அமைகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது.
Leave a Reply