22-02-2017 விஜய ஏகாதசி ஆகும். இது பிப்ரவரி-மார்ச் மாதங்களின் பௌர்ணமிக்கு பிறகு வரும் ஏகாதசியை குறிக்கும். இந்த ஏகாதசியை அனுசரித்தால் வாழ்வின் பாபங்கள் தொலைந்து வெற்றிகள் கைக்கூடும் என்பது நிச்சயம்.
விஜய ஏகாதசியைப் பற்றி பல புராணச் செய்திகள் உண்டு.
ராமர் சீதையை பிரிந்து தேடியதும், ஹனுமான் அன்னையை இலங்கையில் கண்டதும் நாம் அறிந்ததே. இலங்கையை அடைந்து, ராவணனை முறியடித்து ஜானகியை காக்க ராமர் முயற்சிக்கையில் பாகதல்பய முனிவரின் அறிவுரையின் பேரில் விஜய ஏகாதசி விரதம் அனுஷ்டித்து ராவணனை முறியடித்தார்.
பிரம்மாவும் நாரதருக்கு விஜய ஏகாதசியின் மகத்துவத்தை எடுத்து கூறியதாக ஒரு செய்தி உண்டு. ஒரு சமயம் தருமர் கிருஷ்ணரிடம் விஜய ஏகாதசியின் மகிமையை பற்றி கேட்க பகவானும் இந்த ஏகாதசியின் பெயரே அதன் மகத்துவத்திற்கு உதாரணம். எவன் ஒருவன் விஜய ஏகாதசி விரதத்தை அனுசரிக்கிறானோ அவனுக்கு வெற்றியும் பாபங்களிலிருந்து விடுதலையும் உண்டு என எடுத்துரைத்தார். ஸ்கந்த புராணத்திலும் விஜய ஏகாதசியைப் பற்றி குறிப்புண்டு.
விஜய ஏகாதசியையும் மற்ற ஏகாதசி விரதம் போலவே அனுஷ்டிக்கப் படுகிறது.. சிலர் இந்த நாளில் உறங்குவது இல்லை.
விஜய ஏகாதசி அனுசரித்து வாழ்வில் வெற்றியையும் பாபங்களில் இருந்து விடுதலையையும் பெறுவோமாக.
மேலும் ஏகாதசி விரதம் பற்றி அறிய
ஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும்
Leave a Reply