மட்டற்ற மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் அள்ளித் தரும் அற்புத நாள்!
ஹோலி பண்டிகை 1-3-2௦18 அன்று வருகிறது.
வண்ணமயமான இந்தப் பண்டிகையைக் கொண்டாட நமது மனம் துள்ளும் என்பது உண்மை. இந்தக் கொண்டாட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
நல்லிணக்கத் தூதுவிடும் பண்டிகை!
அன்பும், நல்லிணக்கமும் மக்களிடையே பரப்பி, பரஸ்பர ஒற்றுமையையும், நல்லுறவையும் மேம்படுத்தும் பண்டிகை ஹோலி. ஜாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை! இன்றைய நாளின் தேவை இதுதானே?
மன உறுதியை வளர்க்கும் பண்டிகை!
ஹோலி கொண்டாடுவதின் பின்னணியில் ஹோலிகாவின் கதை உள்ளது. ஹோலிகா நமக்கு பிரஹலாதனை நினைவுபடுத்துகிறாள். (பிரஹலாதனின் அத்தை தானே ஹோலிகா!) பிரஹலாதனை நினைத்தால் நமக்கு அவனின் மன உறுதி தான் நினைவுக்கு வரும். நாமும் பிரஹலாதன் போல் துன்பம் கண்டு துவளாமல் நமது லட்சியத்தில் குறியாக நிற்போமாக!
கெட்ட சிந்தனைகளை எரிக்கும் ஹோலிகா தகனம்
ஹோலிகாவின் உருவப் பொம்மையை எரிக்கும் போது, நமது தீய சிந்தனைகளும் எரிகின்றன. கோபம், பொறாமை போன்ற கெட்ட உணர்வுகள் எரிபட்டு, நமது மனது தூய்மை அடைகிறது ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் உருவாகின்றன.
நன்மைகள் பல நமக்குப் பயக்கும் ஹோலியைக் கொண்டாடுவது சரிதானே?
Leave a Reply