" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
ஆயுஷ் ஹோமம் நீண்ட ஆயுளையும் உடல் வளத்தையும் தருகிறது
ஆயுஷ ஹோமத்தின் பலன்
ஆயுஷ ஹோமம் ஆயுர் தேவதையை வேண்டி நடத்தப்படும ஹோமம் ஆகும். . ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளிலிருந்து, எல்லா வருடமும் இதனை நடத்துவது நல்லது. ஆயுஷ ஹோமம் ஒருவருக்கு நீண்ட ஆயுளையும், அகாலமரணமின்மையையும்,வாழ்கை செழிப்பையும் நல்கும்.
பல காலமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் ஆயுஷ ஹோமம் செய்து கொள்வது நன்று. பாலரிஷ்டத்தில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இந்த ஹோமம் தேவையான ஒன்று.
ஆயுஷ ஹோமம் செய்யும் முறை
எந்த ஒரு நாளில் ஒருவரின் பிறந்த நக்ஷத்ரம் பிறந்த மாதத்தில் அமைகிறதோ அதுவே ஆயுஷ ஹோமம் செய்ய நல்ல நாள். ஆயுஷ ஹோமம் செய்பவருக்கு அபிஷேகம் செய்வது உண்டு. பலரும் நவக்ரஹ ஹோமமும் இதனோடு செய்வது உண்டு. ஆயுஷ ஹோமத்தில் ஆயுர் தேவதை, தன்வந்தரி, ம்ருத்யுஞ்சயர் இவர்களை துதிப்பது வழக்கம். பிரம்ம முஹுர்த்தத்தில் இந்த ஹோமம் செய்வார்கள்
எங்களின் ஏற்பாடுகள்
எங்களது ஏற்பாடுகள் உங்களுக்கு முழு வசதியையும் தரும் வண்ணம் அமைக்கப்படும். எங்கள் புரோஹிதர்கள் தங்களின் மேதா விலாசத்தால் உங்களுக்கு முழு ஹோம பலன் முழுமையாக கிடைக்க வழி செய்வார்கள்.
ஆயுஷ ஹோமம் செய்து நீண்ட ஆயுள் பெறுவீராக.
Leave a Reply