" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
சத்யநாராயண பூஜை வாழ்க்கையில் வெற்றிக்கு வழி வகுக்கிறது
சத்யநாராயண பூஜையின் மகிமை
சத்யநாராயணன், பகவான் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுபவர். சத்யம் என்றால் உண்மை என்றும் நாராயணன் என்பது விஷ்ணுவையும் குறிக்கும். எனவே சத்யநாராயணன் உண்மைப்பொருளாக கருதப்படுகிறார்.
அவரை துதிக்கும் மக்களுக்கு நன்மையையும்,செல்வத்தையும், எண்ணிய எண்ணம் ஈடேறவும் அருள் புரிகிறார்.
சத்யநாராயண கதை இப் பூஜையின் முக்கிய அங்கமாகும். நாரத முனிவர் பூமியில் மக்கள் படும் துயரம் கண்டு பகவான் விஷ்ணுவிடம் எடுத்து சொல்லும் நேரம் விஷ்ணு பகவான் இயம்பிய பூஜை இது.
சத்யநாராயண பூஜையைசெய்யும் முறை
கும்பத்தில் நீர் எடுத்து அதை வாழை இலையின் மேல் வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தை மேஜையில் வைத்து, பூஜை செய்பவர்கள் கிழக்கு முகமாக உட்கார வேண்டும். சிவப்பு நிற குங்குமத்தால் ஸ்வஸ்திக் வரைந்து ஆரத்தியும் கரைத்து வைத்து கொள்ள வேண்டும். ஆரத்தி நடுவில் நெய் தீபம் ஒன்று ஏற்ற வேண்டும். பூஜைக்கு தேவையான பழம், பூ, ஊதுபத்தி மற்றும் சூடன் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
ரவை அல்வா, பால், தயிர், துளசி இலை, நெய் ,தேன் இவற்றால் செய்த திரவியம், பழங்கள் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாக செய்யப்படும் .பிள்ளையார் பூஜைக்கு பின் சத்யநாராயண கதை சொல்லப்பட்டு பிரசாதம் வழங்கப் படுகிறது .
சத்யநாரயண பூஜையை பௌர்ணமி, ஏகாதசி, சங்கராந்தி மற்றும் சூரியக்ரஹணம் தோன்றும் நாட்களில் செய்வது உசிதம். வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்கள் இந்த பூஜையை செய்ய உகந்த மாதங்கள்.
எங்களின் சிறப்பு அம்சங்கள்
எங்களின் ப்ரோஹிதர்கள் நல்ல முறையில் சத்யநாராயண கதையை கூறி, இப் பூஜையை செய்பவர்களுக்கு பூஜையின் பலனையும், விரத மகிமையையும், பிரசாதத்தினை உட்கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்கள். எங்கள் ஏற்பாடுகள் உங்கள் பூஜையின் மகிமையை மேம்படுத்தி, உங்களுக்கு முழு பலனையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
சத்யநாராயண பூஜையை செய்து வாழ்வின் தேவைகளை அடைய வேண்டி பிரார்த்திக்கிறோம்.
Leave a Reply