" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
நவக்ரஹ ப்ரீதி நாளும் நன்மை செய்யும்
நவக்ரஹ ப்ரீதி ஹோமம் செய்வதின் அவசியம்
நவக்ரஹங்கள் நம் வாழ்வை தத்தம் சக்திகளால் ஆட்டிவைக்கும் தெய்வங்கள். சூரியன், சனி, செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், ராகு, கேது மற்றும் சந்திரன் என்னும் 9 கோள்கள் நம் வாழ்வில் நடக்கும் நன்மை தீமைக்கு காரணமாக விளங்குகிறார்கள்.
நவக்ரஹ ப்ரீதி ஹோமத்தின் மூலம் ஒருவருக்கு ஜாதக ரீதியாக மற்றும் கோசார ரீதியாக நடக்கும் தீமைகளுக்கு பரிஹாரம் கிடைக்கிறது.
நவக்ரஹ ஹோமம் செய்யும் முறை
நவக்ரஹ ஹோமம் செய்யும் போது ஒன்பது கலசங்களில் நீர் நிரப்பி ஒன்பது நிற துணிகளில் ஒன்பது வகையான தானியங்கள் பரப்பி, ஒன்பது வகையான மலர்களால் அலங்கரித்து, நவக்ரஹங்களை வழிபட வேண்டும். இதற்கு ஒன்பது வகையான பிரசாதங்களை தயாரிக்க வேண்டும்.
அங்காரக தோஷம், கால சர்ப்ப தோஷம், கேது தசை பாதிப்பு ,சனி தசை பாதிப்பு இவற்றால் அவதிபடுபவர்கள் நவக்ரஹ ப்ரீத்தி மேற்கொள்வது நல்லது. ஒருவரின் கால தசைக்கு ஏற்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி நவக்ரஹ ஹோமம் செய்யப்படுகிறது.
எங்கள் பணிகளின் சிறப்பு
நாங்கள் சிறந்ததொரு பணியமைப்போடு இந்த ஹோமத்தின் முழு பலன் உங்களுக்கு கிடைக்கப் பாடுபடுகிறோம். எங்களின் அனைத்து வசதிகளும் உங்களுக்கு ஹோமத்தின் முழுமையான பலனை தரவே அமைக்கப்பட்டு உள்ளன.
நவக்ரஹங்களை ப்ரீதி செய்து வாழ்வில் முன்னேறுங்கள் .
Leave a Reply