" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
மஹாகணபதி ஹோமம் மூலம் வாழ்வில் எல்லா வெற்றிகளையும்தேடுங்கள்
மஹாகணபதி ஹோமத்தின் மகிமை
மஹாகணபதி ஹோமம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக அமைகிறது. விக்ன விநாயகர் எல்லா தடையையும் நீக்கி வெற்றியை தேடி தருபவர். இன்னல்களை களைபவர்.
எல்லா புது முயற்சிகளுக்கும் ,கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும்,திருமண முயற்சிகள் வெற்றியடையவும் விநாயக பெருமானை துதிப்பது நலம். யார்யாருக்கு கேது தசை நடக்கிறதோ, அவர்களும் மஹாகணபதி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமத்தை வருடம் ஒரு முறை செய்தால்வாழ்வில் வளமும்,நலமும் பெருகும். ஒவ்வொரு மாதமும் தங்கள் பிறந்த நக்ஷத்திரத்தில் கணபதிஹோமம் செய்வதால் வாழ்வில் தடைகள் அனைத்தும் நீங்கும்.
அது மட்டுமன்றி, ஒருவருக்கு ஞானம் மற்றும் முக்தியையும் அருளும். விநாயகர் குண்டலினி சக்தியை எழுப்ப வல்லவர். இந்த சக்தியை பெற விரும்புபவர்கள் மஹாகணபதியை தொழுவது நல்லது.
மஹாகணபதி ஹோமம் செய்யும் முறை
அதிகாலைப் பொழுதில் மஹாகணபதி ஹோமம் செய்வது உத்தமம். சூரிய உதயத்திற்கு முன் பூர்ணாஹுதி முடித்து ஹோம பலனை வேண்டினால் அது கிடைப்பது உறுதி. விநாயகரை ஒரு கலசத்திலோ,சக்கரத்திலோ ஆவாஹனம் செய்து கணபதி மூல மந்திரம்,வேத மந்திரம்,கணபதி காயத்ரிமந்திரம் ஆகியவை சொல்லப்பட்டு கணபதிக்கு அஷ்டதிரவியங்கள் (வாழைப்பழம், தேன், தேங்காய், கரும்பு, வெல்லம்,பொரி,மோதகம்,நெய்) சேர்ந்த நைவேத்யம் பூர்ணஹுதியில் அளிக்கப்படுகிறது. அருகம்புல் மற்றும் கொழுக்கட்டையும் அளிக்கப்படுகிறது.
எங்களது சிறப்பு அம்சம்கள்
நாங்கள் கணபதி ஹோமத்தை சிறந்த புரோஹிதர்கள் மூலம் நடத்தித் தருகிறோம். எங்கள் புரோஹிதர்கள் அவர்களது சம்ஸ்க்ருத பாண்டித்யத்தால் நன் முறையில் ஹோமத்தை நடத்தி உங்கள் வேண்டுகோள்களை நனவாக்குவார்கள். எங்களது WIFI வசதி உங்களுடைய குடும்பத்தினரை உலகின் எந்த மூலையில் இருந்தும் ஹோமத்தில் பங்கு கொள்ள உதவுகிறது.
மகாகணபதியை ஆராதித்து உங்கள் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
Leave a Reply